எஸ்.எஸ்.எம் தமிழ் மரபு மையம்


தமிழ் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்காக எஸ்.எஸ்.எம் தமிழ் மரபு மையம் என்ற உலகளாவிய அமைப்பு 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பாக வருடந்தோறும் மாணவ மாணவிகளின் தமிழ் ஆர்வத்தையும் , தமிழின் தொன்மைகளை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டும் தமிழ் மரபுக்கண்காட்சி நடத்தப்படுகிறது.

இந்த அமைப்பின் சார்பாக 2018 ஆம் ஆண்டு முதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு எஸ்.எஸ்.எம் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு நமது கல்வி நிறுவனத்தலைவர் கவாலியா் முனைவர். எம்.எஸ்.மதிவாணன் தலைவராக இருந்து அனைவரும் வியக்கும் வகையில் மாநாட்டினை நடத்தினார். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நடந்த இந்த மாநாடு “ தமிழ் மொழியும் தமிழர்தம் வாழ்வியலும் “ என்ற தலைப்பில் நடந்தது.

மாநாட்டில் மாண்புமிகு தமிழக அமைச்சர் பெருமக்கள் திரு.தங்கமணி,திருமதி.சரோஜா, சட்டமன்ற , பாராளுமன்ற உறுப்பினர்கள், மொரிசியஸ் நாட்டின் ஜனாதிபதி, இலங்கை நாட்டை சார்ந்த அமைச்சர் பெருமக்கள், பல்வேறு நாடுகளைச் சார்ந்த தமிழ் அறிஞர்கள் , ஆய்வாளர்கள் , மாணவமாணவிகள் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர். நிறைவு விழாவில் தமிழ் வளர்சித் துறை அமைச்சர் மாண்புமிகு.திரு. க.பாண்டியராஜன் கலந்துகொண்டு சிறப்பு செய்தார். மாநாட்டின் நினைவாக அய்யன் திருவள்ளுவர் சிலை கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டது.

எஸ்.எஸ்.எம் தமிழ் மரபு மையம் சார்பாக இதுவரை 1 உலகத் தமிழ் மரபு மாநாடும், 6 பன்னாட்டு கருத்தரங்கங்களும் நடைபெற்றுள்ளன. இதுவரை 15 ஆய்வுக் கோவைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் 3000 க்கும் மேற்பட்ட தமிழ் ஆய்வுக் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

இதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா. மஞ்சுளாவும் ஒருங்கிணைப்பாளராக தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர். நா. சங்கர ராமனும் செயலாற்றி வருகின்றனர்.



Call
Call Us: +91 97900 16645


© 2023 | SSM College of Arts & Science, All Rights Reserved.